நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துவோருக்கு அதிக மன உலைச்சல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்கள் மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அநேகமான இணைய பாவனையாளர்கள் மன நோய்களினால் பீடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தின் ஊடாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் மூலமும் இந்த விடயம் தெளிவாகியுள்ளது. 16 வயது முதல் 51 வயது வரையிலான நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பாலியல், சூதாட்டம் மற்றும் சமூக வலைப்பூக்களில் அதிக நாட்டம் கொண்டவர்களுக்கு இவ்வாறான பாதிப்பு;ககள் அதிகம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய பாவனைக்கு அடிமையானவர்களே அதிகளவில் மன உலைச்சளினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துகின்றார்களா? அல்லது இணையத்தை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் மன உலைச்சலினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில் கிட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது
New Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment